வடக்கின் சாதிப்பிரச்சினையேஅரசியல் தீர்வுக்குமுட்டுக்கட்டைஎன்ற ஜனாதிபதி மைத்திரியின் “சுத்துமாத்துப்” பேச்சு

வடக்கில் சாதிப்பிரச்சினை தலைவிரித்தாடும் காரணத்தினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்த்தன புரபல்கலைக் கழகத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் வடக்கில் நிலவி வரும் சாதிப் பிரச்சினை பெரும் தடையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகத்துடன் தாம் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டு காலப் பகுதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவிதம் பற்றி திருப்தியா என ஆணையாளர் நாயகம் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார். இதன்போது 50 வீதம் திருப்தி அடைவதாகதாம் பதிலளித்தாகவும் வடக்கில் நிலவிவரும் சாதிமுறைமை தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பிரதான முட்டுக் கட்டையாக அமைந்துள்ளது என தெளிவு படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் ஜனாதிபதியின் இந்துபேச்சுக் குறித்து கருத்து வெளியிட்ட பத்திரிகையாளர் ஒருவர்  “சிங்களவர்கள் மத்தியில் உள்ள சாதி வேறுபாடுகளை ஜனாதிபதி மைத்திரி மூடி மறைக்க முயலுகின்றாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.