Go to ...
Canada Uthayan Tamil Weekly
* இந்திய ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத்கோவிந்த் வேட்புமனு தாக்கல்    * கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் 13 நிபந்தனை விதித்துள்ளன    * போருக்குப்பின்னர் நிலக்கண்ணி வெடியற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்    * காஷ்மீரில் பெரிய மசூதி வெளியே மூத்த போலீஸ் அதிகாரி அடித்து கொலை
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Monday, June 26, 2017

வடகொரியாவை கடுமையாக அணுகுவோம்: டிரம்ப் எச்சரிக்கை


பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்துள்ளது. வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணை பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து  ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்தது.

தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், அணு ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் உடனான செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “வடகொரியா ஒரு பெரிய, பெரிய பிரச்சனை, அதனை நாங்கள் மிகவும் கடுமையாக அணுகுவோம்” என்று  கூறினார்.

முன்னதாக ஜப்பானுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்து இருந்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு வடகொரியா சோதனை செய்யும் முதல் ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2