- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

லோக்சபா தேர்தலில் மகன்கள் தோல்வி; மகள்கள் வெற்றி
லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சித் தலைவர்களின் மகன்கள் பலர், தோல்வியை சந்தித்துள்ள நிலையில், மகள்கள், வெற்றிக் கனியை தட்டிச் சென்றுள்ளனர்.
வாரிசு அரசியலுக்கு பெயர் பெற்றது, நம் நாடு. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரைத் தவிர, பெரும்பாலான தலைவர்களின் வாரிசுகள், பலமுக்கிய பதவிகளில் உள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில், வாரிசுகள் தான், கோலோச்சுகின்றனர்.வாரிசுகள் பலர்சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், வாரிசுகள் பலர் போட்டியிட்டனர்.
இதில், முன்னாள் பிரதமர் ராஜிவின் மகனும், காங்., தலைவருமான, ராகுல், அமேதி தொகுதியில் தோல்வியை தழுவினார்.ராஜஸ்தான் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, அசோக் கெலாட்டின் மகன், வைபவ் கெலாட்டும், தோல்வி அடைந்தார்.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, மறைந்த, மாதவராவ் சிந்தியாவின் மகன், ஜோதிராதித்ய சிந்தியா, லோக்சபா தேர்தலில் தோற்றவர்களில் முக்கியமானவர்.
பா.ஜ., மூத்த தலைவரான, ஜஸ்வந்த் சிங்கின் மகன், மன்வேந்திர சிங், ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில்,காங்கிரஸ் சார்பில்போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.தேசியவாத காங்கிரஸ் தலைவர், அஜீத் பவாரின் மகன், பர்த் பவார், காங்., மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன், மிலிந்த் தியோரா, அசோக் சவானின் மகன், சங்கர்ராவ் சவான் ஆகியோரும்,இந்த தேர்தலில், தோல்வியை சந்தித்தவர்களில் முக்கியமானவர்கள்.
முன்னாள் பிரதமர், தேவ கவுடாவின் பேரன், நிகில் கவுடாவும் தோல்வி அடைந்துள்ளார். அதே நேரத்தில், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் மகள்கள் சிலர், அபார வெற்றி பெற்றுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத்பவாரின் மகள், சுப்ரியா சுலே, தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மகள், கனிமொழிஆகியோர், வெற்றிபெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.