“லவ் ஜிகாத்” – முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்

கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து முஸ்லிம் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக, சைரோ மலபார் தேவலாயம் வெளியிட்ட அறிக்கை, நேற்று கேரளாவில் உள்ள தேவாலயங்களில் நடந்த ஞாயிறு பிரார்த்னையின் போது, வாசிக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள, சைரோ மலபார் தேவாலயம், சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: கேரளாவிலும், மற்ற தென் மாநிலங்களிலும், சமீபகாலமாக, கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில், சிலர் சிக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சில பெண்கள், கொலை செய்யப்படுகின்றனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள், சமூகத்தின் ஒருமைப்பாட்டுக்கும், அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.