லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் கைது செய்யப்படப்போகும் முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள்

கொலை செய்யப்பட்ட சன்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை வேண்டும் என்றே குழப்பி, சந்தேக நபர்களை விடுவித்தமை தொடர்பாக இரண்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான ஜயந்த விக்ரமரத்ன மற்றும் மகிந்த பாலசூரிய ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது,

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படும் முன்னர், அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற அரச வாகனத்தின் இலக்கத்தை லசந்த வலது கையில் எழுதிய அவரது தனிப்பட்ட குறிப்பேட்டை தொலைத்ததாக ஜயந்த விக்ரமரத்னவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.