ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலி: வங்கிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலியாக வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கணினி தொழில்நுட்ப வரலாற் றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரும் சைபர் தாக்குதலை ரேன்சம்வேர் என்ற வைரஸ் கடந்த இருநாட்களில் நிகழ்த்தியுள்ளது. 48 மணி நேரத்தில் 150 நாடு களுக்கு பரவி சுமார் 2 லட்சம் கணினிகளைச் செயலிழக்கச் செய் துள்ளது. இந்த வைரஸ் கணினியில் நுழைந்த அடுத்த நொடி கணினியில் உள்ள கோப்பு கள் அத்தனையும் ‘என்க்ரிப்ஷன்’ என்ற பெயரில் லாக் செய்து 300 டாலர் தந்தால் மட்டுமே பைல்களை விடுவிப்பதாக மிரட்டல் விடுத்து வருகிறது.
இந்நிலையில், வங்கிகளில் இந்த வைரஸ் தாக்குதல் நடத்தி யிருப்பதால் கணினி வழியிலான பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து, பொதுத் துறை வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, ரேன்சம்வேர் வைரஸ் வங்கி கணினிகளைத் தாக்கியுள்ளது. தற்போது வட இந்தியாவில் உள்ள வங்கிகளில் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள் ளது. தமிழகத்தில் உள்ள வங்கி களில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வங்கி களிலும் உள்ள கணினிகளில் கூடுதல் சக்தி வாய்ந்த ஆன்டி வைரஸ் சாப்ட்வேரை பொருத்தி வருகிறோம். குறிப்பாக, சர்வர் களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதேபோல், ஏடிஎம் இயந்திரங்களிலும் விண் டோஸை மாற்றி அமைத்து வருகி றோம். இதைத் தவிர, இந்த வைரஸ் தாக்குதலை முறியடிக்க என்னென்ன பாதுகாப்பு அம்சங் கள் தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் மேற்கொண்டு வருகிறோம். வாடிக்கையாளர் களும் பொது இடங்களில் உள்ள வைபை வசதியை பயன்படுத்தி தங்கள் வங்கிப் பணப் பரிவத்த னையை ஆன்லைன் மூலம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.