ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு – இந்திய ரெயில்வே

ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெரும்பாலானவை ஓடத்தொடங்கி விட்டன. தற்போது, குறுகிய தூர ரெயில்கள், சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் நேற்று விளக்கம் அளித்தது. ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தாக்கம் இன்னும் இருக்கிறது. சில மாநிலங்களில் மோசமாக உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

எனவே, ரெயில்களில் தேவையின்றி கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதும் ரெயில் கட்டணம்தான் மலிவாக உள்ளது.