ரூ. 500 கோடி செலவில் பா.ஜ.க.முன்னாள் அமைச்சரின் மகள் திருமணம்!

பெங்களூரு(15 நவ 2016): பா.ஜ.க முன்னாள் அமைச்சர் காலி ஜனாதன ரெட்டியின் மகள் திருமணம் ரூ 500 கோடி செலவில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கு அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காலி ஜனாதன ரெட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டவிரோத சுரங்கம் தொண்டியதற்காக சி.பி.ஐ.வால் கைது செய்யப்பட்டவர் . பின்னர் உச்ச நீதிமன்றத்தால் 2015 ஆம் ஆண்டு இவரது சுரங்கம் அமைந்திருக்கும் தனது சொந்த ஊரான பல்லாரி மற்றும் கடப்பா செல்லக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவரது மகள் திருமணம் 16 நவம்பர் நடைபெறவுள்ளது. மிகவும் ஆடம்பரமாக நடைபெறவுள்ள இந்த திருமணத்திற்கான அழைப்பிதழில் தொடங்கி ஆடம்பரத்திற்கு எங்கும் குறை வைக்கவில்லை ஜனார்த்தன் ரெட்டி. மற்ற திருமண அழைப்பிதழ்களில் உள்ள எழுத்துக்களுக்கு பகரமாக உள்ளே ஒரு LCD திரை இருக்கிறது. அதில் ஜனார்தன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு வருபவர்களை சினிமாவில் வருவது போன்று வரவேற்கும் பாட்டு ஒன்று காண்பிக்கப்படுகிறது.

திருமணத்திற்காக விஜயநகர சாம்ராஜ்யத்தை பெங்களூரு அரண்மனைத் திடலில் உருவாக்கியுள்ளார். நான்கு நாட்களாக நடக்க இருக்கும் இந்த திருமண விஷேஷம் நவம்பர் 12 ஆம் தேதி மருதாணி விழாவுடன் தொடங்கியதாகத் தெரிகிறது.

மணமகளின் திருமணப் புடவையின் விலை மட்டுமே 17 கோடி ரூபாய் என்றும், அத்துடன் திருமனப்பெண்ணான பிராமினி அணியும் ஆபரணங்களின் விலை 90 கோடி மதிப்பிலானவை என்று கூறப்படுகிறது. திருமணதிற்கு வந்தவர்களை மகிழ்விக்க ஷாருக் கான் பங்கெடுக்கும் நிகழ்ச்சியும், பிரபுதேவாவின் நடனமும் இன்னும் தெலுங்கு திரையுலகின் பிரபலங்களும் கலந்துகொள்கின்றனர்.

ஏறத்தாள 30000 விருந்தினர்கள் பங்கெடுக்கும் இந்த திருமணத்திற்கு என்று 1500 அறைகள் நட்சத்திர ஹோட்டல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை திருமண அரங்கிற்கு அழைத்து வர 2000 வாகனங்களும் இன்னும் முக்கியமான நபர்களை வரவேற்க 15 ஹெலிபாட்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கருப்புப் பணத்திற்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ள நிலையில், மக்கள் காசுக்காக அல்லல்படும் நிலையில், மேலும் காலி ஜனார்தன ரெட்டியின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள இந்நிலையில் இப்படி ஒரு திருமணத்தை நடத்த இவரிடம் எப்படி இவ்வளவு பணம் உள்ளது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர் 40000 இல் இருந்து 50000கோடி ரூபாய் மதிப்பிலான கருப்புபணத்தை சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

As part of its campaign against black money, the BJP high command has instructed all its partymen to stay away from its leader and mining scam accused Gali Janardhan Reddy’s daughter’s lavish wedding in Bengaluru.

The BJP feels its image may get dented if it associates itself with the big, fat wedding, which comes amid the chaos and politics over the government’s demonetisation scheme. Many Karnataka ministers and city VVIPs have also expressed their regrets over not attending the wedding.