- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் கோலாகலமாக தீபாவளி திருநாள்
ராமர் பிறந்த இடமான அயோத்தியில் தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தென்கொரிய அதிபர் மனைவி கிம்ஜங் ஷூக் பங்கேற்கிறார். மேலும் சரயூ நதிக்கரையில் 3 லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
நாடு முழுவதும் மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை அணிந்தும் ,பட்டாசு வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் வருகின்றனர். அயோத்தில் மாநில அரசு சார்பில் பெரும் தீபாவளி கொண்டாடட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உபி., முதல்வர் யோகி மற்றும் கவர்னர் ராம்நாயக், அண்டைய மாநில கவர்னர்கள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக தென்கொரிய அதிபர் மனைவி கிம்ஜங் ஷூக் பங்கேற்கிறார். இந்த விழாவில் உபி., முதல்வர் யோகி ஆதித்யாநாத் ராமர் கோயில் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என கூறப்படுகிறது.