ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு, 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் திங்கட்கிழமை பேரறிவாளன் பரோலில் வெளியே வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.