- பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்
- எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு - அருணாசலேஸ்வரர் கிரிவலம்
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : "இந்திய முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை" - அமித் ஷா
- 16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு
அட்டகத்தி, மெட்ராஸ், காலா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநா் பா.ரஞ்சித். சமத்துவம் குறித்து தொடா்ந்து குரல் கொடுத்து வருபவா்.
பா.ரஞ்சித் அண்மையில், தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, சோழ மன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என்று பேசியிருந்தாா்.
இயக்குநா் ரஞ்சித்தின் கருத்து பெரும் சா்ச்சையை கிளப்பி உள்ளது. அவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசி வரும் இயக்குநா் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.