- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ரன்விர்ஷா பண்ணை வீட்டில் 50க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல்
காஞ்சிபுரம்: தொழிலதிபர் ரன்ஷிர்ஷா பண்ணை வீட்டில், ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையில் நடந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்விர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி குவியல் குவியலாக தொன்மையான சிலைகளை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, ரன்விர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. திருவையாறில், அவருக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை நடந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மொகல்வாடி என்ற கிராமத்தில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 50க்கும் மேற்பட்ட பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
சோதனை தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறியதாவது: தமிழகத்தில் பணக்காரர்கள் கோயில் சிலைகளை வைத்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களாகவே சிலைகளை எங்களிடம் ஒப்படைத்து விட்டால், பிரச்னையில்லை. ஒரு மாத்ததிற்குள் சிலைகளை ஒப்படைத்துவிட்டால், அவர்களுக்கு தண்டனை கிடைக்காது. அறநிலையத்துறை அதிகாரிகள் 9 பேரை ரிமாண்ட் செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.