ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் செலவு செய்தது ரூ.1.10 கோடி; கட்சிகளுக்கு ஆதரவளித்த சுயேச்சைகள் மீது நடவடிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக் காக ரூ.1 கோடியே 10 லட்சம் வரை தேர்தல் ஆணையம் செலவு செய்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரி வித்த சுயேச்சைகள் மீது நட வடிக்கை எடுக்கவும் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடப்பதாக இருந்தது. இந்நிலையில், பணப் பட்டுவாடா புகார்கள் அடிப்படை யில் தேர்தலை நேற்று முன்தினம் நள்ளிரவில் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தற்போதைய சூழலில் உடனடியாக தேர் தலை நடத்த ஆணையம் தயா ராக இல்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் படி, ஒரு தொகுதியில் எம்எல்ஏ பதவி காலியாக இருந்தால் அங்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதே சட்டப்படி இடைத்தேர்தல் நடத்தப்படாமலும் இருக்கலாம். அதற்கு அடிப்படையில் 2 காரணங்கள் இருக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் தின் 151-ஏ பிரிவில், ‘காலியாக உள்ள ஒரு தொகுதிக்கு ஓராண் டுக்குள் பொதுத்தேர்தல் நடக்க வாய்ப்பிருந்தால் அங்கு இடைத் தேர்தல் நடத்தத் தேவையில்லை. அதேபோல, 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த முடியாத நிலை இருந்தால், மத்திய அரசிடம் காரணத்தை தெரிவித்துவிட்டு தேர்தலை நிறுத்தி வைக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.

எனவே, ஜூன் 4-ம் தேதிக் குள் ஆர்.கே.நகரில் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் ஆணை யத்துக்கு இல்லை. பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதால், அதன் தாக்கம் உடனடியாக நடத் தப்படும் தேர்தலிலும் இருக்கும் என்பதை மத்திய அரசிடம் தெரிவித்து, இடைத்தேர்தலை ஆணையம் தள்ளிவைக்கும்.

தினகரனுக்கு நோட்டீஸ்

பணப் பட்டுவாடா புகார், வருமான வரித் துறை அறிக்கை அடிப்படையில், அதிமுக (அம்மா) கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகனுக்கு ‘ஏன் வேட் பாளர் பதவியில் இருந்து உங்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது’ என விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பும். அவர் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகள், பார்வையாளர்கள், அதி காரிகள், அலுவலர்களுக்கான செலவுகள், வீடியோ குழுவின ருக்கான செலவு உள்ளிட்டவற்றுக் காக இதுவரை ரூ.1 கோடியே 10 லட்சத்தை தேர்தல் ஆணையம் செலவழித்துள்ளது.

தேர்தல் விதிமீறல் தொடர் பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர் கள், தங்கள் டெபாசிட் தொகையை தேர்தல் அதிகாரியிடம் விண் ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

நடவடிக்கை

ஆர்.கே.நகரில் அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 62 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் சிலர் தினகரனுக்கும், சிலர் மதுசூதனனுக்கும் ஆதரவு தெரிவித்தனர். இது விதி மீறல் என்பதால், சுயேச்சை வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர்கள் ஆணையத் துக்கு பரிந்துரைத்துள்ளனர்.

அந்த பரிந்துரையின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும்.

3 ஆண்டுகள் வரை..

தேசியக் கொடியை தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத் தியது கடும் நடவடிக்கைக்குரிய குற்றம். இது தொடர்பான புகைப் படத்தில் காணப்படும் நபர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.