- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல்: நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல் நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
ரஜினிகாந்த் தனது புதிய கட்சியை அறிவிப்பதற்கு முன்பாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அதன் கட்டமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் மற்றும் செயலாளர் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நேர்காணல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக ஜனவரியில் வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேர்காணல் நடைபெற்றது. பின்னர் 2-ம் கட்டமாக தேனி, நீலகிரி உள்ளிட்ட ஆகிய 7 மாவட்டங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில், 3-ம் கட்டமாக 6 மாவட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல் அந்தந்த மாவட்டங்களிலேயே நடைபெற உள்ளது. அதன்படி, 6-ம் தேதி தஞ்சாவூரிலும், 7-ம் தேதி திருச்சியிலும், 8-ம் தேதி பெரம்பலூர், அரியலூரிலும், 9-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூரிலும் நேர்காணல் நடைபெற உள்ளது. அப்போது ரஜினி, காணொளி காட்சி மூலம் ரசிகர்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.