ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது – தினகரன்

ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது:
பேருந்து கட்டணத்தை அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம், அரசு அதனை நிறைவேற்ற வேண்டும். அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.