ரஜினியை அரசியலுக்கு யாரும் அழைக்கவில்லை: சீமான் கருத்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரத் தேவை யில்லை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என யாரும் அழைக்க வில்லை. பட்டாசு வெடிக்கும் போது பயத்தில் நிற்போம். அப்போது, சில பட்டாசுகள் புஸ் என ஆகிவிடும். அப்படித்தான் ரஜினி அரசியலுக்கு வந்தால் புஸ்வாணமாகி விடுவார். அரசியலுக்கு வந்தால், அவரும் மற்ற அரசியல்வாதிகள் போலத் தான் இருப்பார்.
தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்று தேவைப்படவில்லை. காமராஜர், கக்கன் போன்றவர்கள்தான் தேவைப்படுகின்றனர். மக்கள், சினிமா நடிகர்களை எதிர்பார்க்க வில்லை. ஜீவானந்தம், சிங்கார வேலு போன்றவர்களைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்றார்.