ரஜினியின் குரல் பாஜ., அல்லது அதிமுக.,வினுடையதா என சந்தேகமாக உள்ளது

புதுச்சேரி சென்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், ரஜினியின் குரல் பாஜ., அல்லது அதிமுக.,வினுடையதா என சந்தேகமாக உள்ளது. சமூக விரோதிகள் யார் என தெரியும் என்ற ரஜினி நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்.

சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.