- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

ரசாயன தாக்குதல் : சிரியாவில் 40 பேர் பலி
சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில், 40 பேர் பலியாகினர்; இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.மத்திய கிழக்கில் உள்ள சிரியாவில், எட்டு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கடந்த, 2011ல் துவங்கிய இந்த போரில், ஏற்கனவே, நான்கு லட்சம் பேர் பலியாகி விட்டனர்; இரண்டு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர். அந்நாட்டின் மக்கள் தொகையே பாதியாக குறைந்துவிட்டது. இருப்பினும், சண்டை தொடர்கிறது.அதிபர் ஆசாத்தின் அரசுப்படை – போராட்டக்காரர்கள் – ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு என, மும்முனை போர் நடக்கிறது. கடந்த ஜனவரியில், இப்போர் உச்சகட்டத்தை எட்டியது. இதில், நுாற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.போராட்டக்காரர்கள் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை, அரசுப்படை கைப்பற்றியது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கூட்டா பகுதி மட்டுமே எஞ்சியிருந்தது.இந்நிலையில் நேற்று, அந்த பகுதியில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 பேர் பலியாகினர்.
இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 500க்கும் மேற்பட்டோர், சுவாசப்பிரச்னை, கண் மற்றும் வாய் பகுதியில் ஏற்பட்ட தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.