- கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
- இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

யூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்!
2018 உலக கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் யூரோ சாம்பியனான போர்த்துக்கல், சுவிஸிடம் தோல்வியடைந்தது.
32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் யூரோ சாம்பியனான போர்த்துக்கல் அணி, சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. காயம் காரணமாக போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் 24வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ முதல் கோல் அடித்தார். இதைதொடர்ந்து 30வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் வீரர் அட்மிர் மிமிதி கோல் அடித்தார்.
போட்டியின் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து போராடிய போர்த்துக்கல் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிப்பெற்றது.