- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
- பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!
- கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

யாழ்.மாநகர முதல்வராக அல்லது வடக்கு மாகாண முதல்வராவதற்கு சீ.வீ.கே. சிவஞானத்திற்கு சந்தர்ப்பம் கிட்டுமா?
உள்ளாட்சி தேர்தலில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சி தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் வேட்பாளர் களை தெரிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின் றன. இந்த நிலையில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி இருந்து வருகிறது. ஊடகவியலாளர் வித்தியாத ரனை யாழ். மாநகர முதல்வராக நிறுத்துவ தாகவும் அண்மையில் தகவல்கள் வெளி யாகி இருந்தது.இந்த நிலையில் அடுத்த வருடம் வடக்கு மாகாண சபை காலம் முடிவுறவுள்ள நிலை யில் வடக்கு மாகாண சபை அவைத்தலை வராக உள்ள சீ.வீ.கே சிவஞானத்தை யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக நியமிக்க தற்போது பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக தெரிய வருகிறது.
இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விசேட அமர்வு ஒன்றில் மாகாண சபை உறுப்பினர் திரு சுகிர்தன் தனது உரைநேரத்தின்போது “ வடக்கு மாகாண சபையின் அடுத்த முதல்வராக தற்போதைய அவைத் தலைவர் திரு சி. வி. கே. சிவஞானத்தை தேர்ந்தெடுத்து விட்டு தற்போதைய முதல்வர் திரு விக்கினேஸ்வரன் அவர்களை பாராளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றும் அதன் மூலம் அவர் சிறந்த சேவை ஆற்ற முடியும் என்றும் கருத்து வெளியிட்டமை இங்கு குறிப்பிடத்தக்குத.