யாழ் போதனா வைத்திய சாலையில்ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் நினைவு பூங்கா திறநது வைக்கப்பட்டது

அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் யாழ் இந்து ஆரம்ப பாட சாலை முன்னாள் உப. அதிபர் திருமதி. சரஸவதி ஆறுமுகம் அவர்களின் நினைவாக வைத்தியா சாலை பெண்கள் வாட் 02 இல் நோயாளர் ஆறுதல் பெறுவதற்கான பூங்கா அமைக்கப்பட்டு வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா திறந்துவைத்தார்.  நினைவுப் பூங்கா அமரரது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது.

அமரத்துவம் அடைந்த முன்னாள் ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள், எமது தாயகத்தின் சுய நலமற்ற சமூக சேவையாளரும் கல்விமானுமாகிய திரு ஆறு திருமுருகன் அவர்களது தாயார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.