யாழ் குடாநாட்டில் இடம்பெறும் விபத்துகளின் தாக்கம் அதிகரிக்கின்றது

யாழ் குடாநாட்டில் அண்மைக் காலங்களில் இடம்பெறும் விபத்துக்களின் தாக்கங்கள் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் மனங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

அண்மையில் அங்கு இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் படுகாய மடைந்தகுடும்பஸ்தர்கள் இருவர் சிகி;ச்சை பலனின்றி யாழ் போதனாவைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.

வல்வட்டித்துறையை சேர்ந்த மூன்று பி;ள்ளைகளின் தந்தையான கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் (வயது 68) என்பவர் கடந்த 15 ஆம் திகதி நண்பகல் யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை வீதி வழியாக வீடுநோக்கி பயணித்துள்ளார். அப்போது ஆவரங்கால் பகுதியில் குறித்த நபருக்கு முன்னால் சென்ற வாகனத்தின் கதவு கழன்று குறித்த நபரின் மோட்டார் சைக்கிளில் மோதிய தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நபர் அச்சுவேலி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சை க்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயி ரிழந்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, பருத்தித்துறை புலோலி வடக்கை சேர்ந்த கந்தசாமி குலநாயகம் (வயது 84) என்ற முதியவர் கடந்த செவ்வாயன்று காலை தெல்லிப்பழைக்கு சென்று வீடு திரும்பி, பின்னர் பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடந்துள்ளார். அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் குறித்த நபர் மீது மோதியுள்ளனர். சம்பவ இடத்தில் மயக்கமடைந்த நபர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகரி நமசிவாயம் பிறேம் குமார் மேற்கொண்டார்.

இது இவ்வாறிருக்க குடாநாட்டில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தும் மக்கள் மனங்;களை காயப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் மேலும்காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி செவ்வாயன்று நண்பகல் பயணித்த கடுகதி புகையிரதம், கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட காரை மோதியதில் காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் நண்பகல் கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம், காரை மோதி கந்தர்மடம் அரசடி வீதிவரை இழுத்துச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் கார் முற்றுமுழுதாக சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ் வர்த்தகரான நல்லூரை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் தலையில் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிய சேதம் ஏற்பட்டிருந்த நிலையிலும் குறித்த நபர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.