யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் இயக்கத்தின் தலைமையகத்தைக் கொண்ட கனடாவிலும் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தைக் கொண்ட ஜேர்மனி நாட்டிலும் தமிழ் நாட்டிலும், மாநாடு நடைபெறவுள்ள யாழ்ப்பாணத்தில் இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளையாலும் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மாநாட்டிற்கான ஆயத்தங்களைச் செய்துவருவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ஜேர்மனி வாழ் அன்பர் சர்வதேச கிளைகளின் தொடர்பாளர் திரு இராஜசூரியர் இராமநாதனாலும் மேற்கொள்ளப்ப்டுகினறது
.இந்த வேளையில் மேற்படி மாநாட்டை யாழ்பபாணத்தில் நடத்துவதற்குரிய முழுச் செலவில் பெரும்பகுதியை எமக்குத் தந்துதவிய கனடாவாழ் அன்பர் வர்த்தகப் பெருந்தகை கொடையாளி, தமிழ் மொழியையும் தமிழ் இனத்தை நேசித்த வண்ணம எமது தாயகச் சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக தனது உழைப்பின் பெரும்பகுதியை அர்ப்பணிக்கின்றவ ருமான ரெக்னோ மீடியா நிறுவன அதிபர்9(TEKNO MEDIA INC) திரு மதன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் நோக்கோடு கனடாவின் பிரம்டன் மாநகரில் அமைந்துள்ள ரெக்னோ மீடியா(TEKNO MEDIA INC) நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு எமது இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் சென்றனர்.
அவரைச் சந்திக்கச் சென்ற எமது பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலக உறுப்பினர்களான திரு துரைராஜா (அகிலத் தலைவர்) திரு ஆர் என். லோகேந்திரலிங்கம் (இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளரும் ஆகஸ்ட் மாத மாநாட்டிற்கான கனடியக் குழுவிற்கு தலைமை தாங்குபவர்) மற்றும் இயக்கத்தின் வட அமெரிக்க செயற்பாடுகளுக்கு பொறுப்பான திரு சிவா கணபதிப்பிள்ளை ஆகியோரை (TEKNO MEDIA INC)திரு மதன் அவர்கள் வரவேற்று அன்பானதும் ஊக்கம் கொடுப்பதுமான வார்த்தைகளைப பகிர்ந்து வழியனுப்பி வைத்தார்.
ரெக்னோ நிறுவனம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் யாழ்ப்பாண மாநாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கிய தொகை 25000 கனடிய டாலர்கள் என்பதும் இலங்கைப் பணத்தில் சுமார் 26 இலட்சம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
திரு மதன் அவர்களுக்கும் அவரது துணைவியார் திருமதி தர்மினி அவர்களுக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் வாழ்த்துக்கள என்று இயக்கத்தின் தலைவர் திரு துரைராஜா தெரிவித்தார்