யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன??

யாழ்ப்பாணத்தில் ஆஸ்பத்திரி வீதியில் யாழ்ப்ப்பாண புகையிரத நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருந்த, சிங்கள மகாவித்தியால யம் 33 வருடங்களுக்கு முன்னர் சேதமாக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான பொருட்களை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமித்த தமிழ் மக்கள் அபகரித்துச் சென்றார்கள். இவ் வாறு சேதமாக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான ஏற்பாடு கள் இடம்பெற்றுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

33 வருடங்களுக்கு முன்னர் பல இனங்கள் சார்ந்த மாணவர்கள் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தில் மீண்டும் அனைத்து இன மாணவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது என்று கல்வித்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1985ஆம் ஆண்டு யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற மோதலி னால் மூடப்பட்ட இந்த வித்தியாலயத்தின் இவ்வாறான கல்வி நடவடி க்கையின் ஊடாக உண்மையான நல்லி ணக்கத்தை துரிதமாக முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 8.30க்கு யாழ்ப்பாணம் பழைய பூங்கா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடை பெறவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.