யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞரும், சித்திரத் தேர்களை உருவாக்கும் தெய்வீகக் கலையில் உச்சத்தை அடைந்தவருமான திரு கலாமோகன் கிருஸ்ணபிள்ளை தற்போது கனடா வந்துள்ளார்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞரும், சித்திரத் தேர்களை உருவாக்கும் தெய்வீகக் கலையில் உச்சத்தை அடைந்தவருமான திரு கலாமோகன் கிருஸ்ணபிள்ளை அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார்.
ஸ்காபுறோ பெரிய சிவன் ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற புதிய சித்திரத் தேர் வெள்ளோட்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆகியவற்றில் சிறப்பு விருந்தினராகவும் ஆலோசனைகள் வழங்கும் சிற்பக் கலைஞராகவும் விளங்கிய அவருக்கு 60வது வயதை அடைவதை பாராட்டியும் அவருக்கு சேவை நலன’ பாராட்டியும. இன்று சனிக்கிழமை மாலை ஸ்காபுறோ பெரிய சிவன் ஆலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம;பெற்றது.
மேறடி வைபவத்திற்கு கணக்காளர் திரு இலங்கேஸ்வரன் தலைமை தாங்கினார்.மார்க்கம் நகரசபை கவுன்சிலர் திரு லோகன் கணபதி மற்றும் ரொரென்ரோ நகரசபை உறுப்பினர் திரு நீதன் சாண ஆகியோர் உட்பட பலர் அங்கு உரையாற்றினார்கள். கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் அங்கு உரையாற்றுவதற்கு முன்னர் திரு கலாமோகன் கிருஸ்ணபிள்ளை அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும், ஒன்றாரியோ மாகாண அரசின் குடியுரிமை மறறும் குடிவரவு அமைச்சர் திருமதி லோறா அல்பன்சே அவர்களின் அரசு சார்ந்த பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கினார்
கலை நிகழ்ச்சிகள் பலவும் இடம்பெற்றன.
பல ஆலயஙகள் மற்றும் சமய அமைப்புக்கள் ஆகியனவும் அவருக்கு கேடயம் வழங்கிக் கௌரவித்தன.
இங்கே காணபபடும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்