யாழ்ப்பாணத்தில் புளொட் உறுப்பினரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள் அரச பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட உள்ளன

தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் என்று அழைக்கப்பட்ட புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டிலிருந்து மீட் கப்பட்ட ஆயுதங்கள் தொடர் பான விபரங்களை அறிந்து கொள்வதற்காக அவற்றை அரச பகுப்பாய்வுத் திணைக் களத்துக்கு அனுப்பக் கோரும் யாழ்ப்பாணப் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு நீதி வான் அனுமதியளித்தார்.

புளொட்டின் முன்னாள் உறுப்பினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட்டின் அலுவலகம் இருந்தது.

அந்த வீட்டின் உரிமை யாளர் வெளிநாட்டில் உள் ளார். அங்கிருந்து வெளியேற புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மறுப்புத் தெரி வித்து வந்தார்.

வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்றின் கட் டளையின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம் பொலிஸார் சென்றனர்.

அங்குள்ள பொருள் களை வெளியேற்றும்பணி யில் பொலிஸார் ஈடுபட்ட னர். அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப் பாக்கிகள் உள்ளிட்ட ஆயு தங்கள் காணப்பட்டன.

பயன்படுத்தத்தக்க ஏகே 47 துப்பாக்கி ஒன்று, அதற் குப் பயன்படுத்தப்படும் கோல் ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற் குப் பயன்படுத்தும் மகஸின் கள் 3, வோக்கிகள் 2 மற் றும் 2 வாள்கள் மீட்கப் பட்டன.
அதனையடுத்து புளொட் டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். சந் தேகநபர் யாழ்ப்பாணம் நீதி வான் நீதிமன்றில் கட்டளை யில் தொடர்ச்சி யாக சுமார் 9 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேக நபர் செவ்வாய்க் கிழமை யாழ்ப்பாணம் நீதி வான் நீதிமன்றில் முற்படுத் தப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந் தது.

“சந்தேகநபரிடம் மீட் கப்பட்ட ஆயுதங்களில் ஏகே 47 துப்பாக்கி ஒன்று, கைத் துப்பாக்கி ஒன்று மற்றும் 2 வோக்கிகள் என 4 பொருள் கள் பகுப்பாய்வுக்கு உட்படுத் தப்படவேண்டும். அவற் றைத் தயாரித்த நாடு எது? உற்பத்தி ஆண்டு எது? உள் ளிட்ட தகவல்களை அறிவ தன் ஊடாக அவை எங் கிருந்து சந்தேகநபருக்குக் கிடைத்தது என்பதை ஆராய முடியும். எனவே குறித்த நான்கு சான்றுப் பொருள் களையும் அரச பகுப்பாய் வுத் திணைக்களத்துக்கு அனுப்ப மன்று அனுமதிக்க வேண்டும்” என்று பொலி ஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண் ணப்பத்துக்கு அனுமதியளித்த மன்று, சந்தேகநப ரான புளொட் முன்னாள் உறுப்பினரின் விளக்க மறி யலை 14 நாள்களுக்கு நீடி த்து உத்தரவிட்டது.