யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக் கியுடன் சென்று இரத்த தானம் செய்து விட்டு சென்ற அடையாளம் தெரியாத நபர் தொடர்பில் பல கோணங்களில் விசா ரணை இடம்பெற்று வருகிறது.
தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் இந்து கல்லூரியில் அன்றைய தினம் இரத்தான முகாம் இடம்பெற்றது. அப்போது அங்கு இரத்தம் வழங்குவதற்கு இரு நபர்கள் சென்றுள்ளார்கள். அவர்களில் ஒருவர் உடற் பரிசோதனை மேற்கொண்டுவிட்டு நிறை அளப்பதற்கு சென்றுள்ளார். அப்போது இடுப்பில் இருந்த தனது கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடன் வந்தவரிடம் ஒப்படைத்து விட்டு நிறையை சரிபார்த்துள்ளார். பின்னர் இரத்தம் வழங்கி விட்டு சென்றுள்ளார்.
இது தொடர்பாக சில இணையத்தளங் களில் செய்தி வெளியாகியது. குறித்த விடயம் தொடர்பாக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, பலர் இரத்த தானம் வழங்குவதற்கு வந்துசென்று கொண்டிருந்தார்கள். அதேநேரம் குறித்த நபரும் வந்து சென்றுள்ளார். கைத்துப்பாக்கி வைத்திருந்தவர் யார் எவர் என எமக்கு தெரியாது. அந்த இடத்தில் அவரவர் அவர்களுடைய பணியை மேற்கொண்டிருந்தனர். அங்கு எந்த பரபரப் பும் காணப்படவில்லை.

வவுனியாவில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர்கள்

வவுனியாவில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நண்பகல் மத்திய பேருந்து நிலையத்தில் 4 கிலோ 200 கிராம் கேரளக்கஞ்சா வுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா போதை ஒழி ப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவரு கையில், அன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ் ஒன்றில் 4கிலோ 200கிராம் கேரளக் கஞ்சாவினை எடுத்துச் சென்ற மகிய ங்கனை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 29 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.