யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஒட்டுமொத்த விருந்தினர்களின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரி.

சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த நாடு மேற்கொண்டிருந்தது. இதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்ட ராணுவ அதிகாரிகளை களமிறக்கியிருந்தது சீனா.

அதில் ஒருவர்தான் ராணுவ அதிகாரி Shu Xin. இவரது புகைப்படங்கள் அங்குள்ள சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைராலாக பரவி வருகிறது.

உலகத் தலைவர்கள் முக்கிய விடயங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் இருக்க, சீனாவின் சமூக வலைத்தளங்கள் மொத்தமும் இளம் ராணுவ அதிகாரி குறித்து ஸ்லாகித்து பேசிக்கொண்டிருந்தது.

சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குயியாங் நகரில் பிறந்து வளர்ந்தவர் என்றும், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் அதிகாரிகளில் மிகவும் சக்தி வாய்ந்தவர் எனவும் ஒரு பத்திரிகை ஸிங் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்தே சீனாவின் இளைஞர்கள் ஒட்டு மொத்தமாக அதிகாரி ஸிங் குறித்து தங்கள் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட துவங்கினர்.

Shu Xin கடந்த 2013 ஆம் ஆண்டு சீன ராணுவத்தில் மிகவும் அழகான 10 உறுப்பினர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் இவருக்கு பாடகராக வேண்டும் என்பதே சிறு வயது முதல் ஆசையாக இருந்ததாம் என இவர் குறித்த தகவல்களை சீன பத்திரிகைகள் தினசரி வெளியிட்டு வருகின்றன.