- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

மோடி வேண்டுகோள் – மார்ச்-22 ம் தேதி ” ஜனதா கர்ப்பியூ “
மார்ச் 22 ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:
கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லவேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். கொரேனா வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது என எண்ண வேண்டாம். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம். மக்களுக்காக , மக்களே சுயமாக ஊரடங்கு நடைமுறையை பின்பற்றுவோம்.
22 ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டின் முன்னால் அத்தியாவசிய சேவை செய்வோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிரானக நடத்தப்படும் போராட்டம் அன்று இந்தியாவின் சோதனை ஓட்டமாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம்.
தேவையின்றி மருத்துவமனைகளில் குவியாமல் பதற்றத்தை தவிர்க்க வேண்டும். மக்கள் விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும். அலட்சியம் கூடாது.கொரோனா வரைஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது.மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.
அத்தியாவசிய சேவையை செய்பவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுகிழமை வெளியே வர வேண்டாம். மருத்துவர்கள் ஊடகத்துறையினர் போக்குவரத்து துறையினருக்கு மற்றவர்கள் தொந்தரவு தர வேண்டாம். நோய்க்கு ஆளாகாதீர்கள் .நோய்களை பரப்பாதீர்கள் . பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி கூறுங்கள். இவ்வாறு பிரதமர் கூறினார்.