மைத்திரி அரசாங்கத்தின் “குரலாக” ஒலிக்கும் சுமந்திரனின் சவால்களுக்;கு சவாலாக எழுந்துள்ள மற்றுமொரு யாழ் சட்டத்தரணி சுகாஸ்

சுமந்திரன் என்னும் ஒரு சட்டத்தரணி, பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வருவதற்கு விரும்பினார். அதற்குக் காரணம், அவரது சட்டக்கல்லூரி மாணவ நண்பர்கள் பலர் அவரிடம் பல தடவைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்களாம். “சட்டத்தை நன்கு கற்றுக்கொண்டு விவாதிக்கும் ஆற்றலும் கொண்டவர் நீங்கள். எனவே அரசியலுக்குள் பிரவேசியுங்கள்” என்றார்களாம் நண்பரகள். முதலில் தமிழர் தரப்பில் முயன்ற அவர் அதில் தோல்வி கண்டு “குள்ளநரி” ரணிலிடம் சென்றாராம். கொழும்பில் ஏதாவது தொகுதியில் போட்டியிட விரும்பிய அவருக்கு அறிவுரைகள் பல சொல்லிய ரணில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்குள் வந்தால் “நன்மைகள்” பல உண்டு என்று உற்சாகப்படுத்தி அதற்கா பரிந்துரைகள் கூட சம்பந்தப்பட்டவர்களிடம் செய்தாராம்.

இவ்வாறு தமிழர் அரசிலுக்குள் வந்த சுமந்திரன், தற்போது சிங்கள அதிரடிப்படையினர் சூழ்ந்து நிற்க தமிழ் மக்களைச் சந்திக்கும் ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார். இதற்கு நன்றிக் கடன் ஆற்றும் வகையில், தற்போது, அரசாங்கத்தின் குரலாகவே மாறிவிட்டார். அண்மையில் அரசியல் அமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் “ஒன்றுமே இல்லை” என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சொல்ல, அதற்கு சவாலாக அவரை நோக்கி “இடைக்கால அறிக்கையை பூரணமாக வாசிக்காமல் அவ்வாறு சொல்லக்கூடாது” என்று மறுப்பறிக்கை விட்டார். அதற்கா பதில் முதலமைச்சரிடமிருந்து வருவதற்கு முன்னாள், மற்றுமொரு சவாலை அதிரடிப்படை புகழ் சுமந்திரன் எதிர்கொண்டுள்ளார்.

தமிழ் இடைக்கால அறிக்கையில் ஒன் றும் இல்லை என கூறுபவர்கள் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனா திபதி சட்டத்தரணியுமான சுமந்தி ரன் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ள சட்டத்தரணி கன கரட்ணம் சுகாஸ், சுமந்திரன் விவாதத்திற் கான திகதியையும் இடத்தையும் அறிவிக்கு மாறு பதில் சவால் விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில்; சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து ள்ளார். அண்மைக்காலமாக பலத்த விவா தங்களுக்கு உட்பட்டிருக்கும் விடயம் கோப் குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட் டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தற்போ தைய விசாரணைகளிலும் ஆஜராகி வருகி ன்றார். இது உண்மையிலேயே நலன்களு க்கு இடையிலான முரண்பாடாக காணப் படுகின்றது.

இது ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்றும் செயற்பாடாகதான் காணப்படுகின்றது. தமி ழ்த் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட் சியை காப்பாற்றும் முகவராகவே செயற்படு கின்றது. மாறாக எங்கள் தாய்மார்கள் தமது பிள்ளைகளை தேடி கொண்டுள்ளார்கள், அரசியல் கைதிகள் விடுதலைக்காக ஏங்கி கொண்டுள்ளார்கள். உங்களுக்கு வழக்குகளுக்கு ஆஜராக வேண்டும் என்றால், எங்களுக்காக போராடியவர்களுக்கு ஆஜராகுங் கள். அதனை விடுத்து ஐக்கிய தேசிய கட் சியை காப்பாற்றுவதற்காக ஆஜராகுவதை கண்டிக்கின்றோம் என்கின்றார் சுகாஸ் என்னும் சட்டத்தரணி.
அவர் மேலும் கூறுகையில் “எமது மாவீரர் நினைவு தினங் களை குழப்புவதற்கு யாழில் திட்டமிட்டு குற்ற செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் இவற்றுக்கு அஞ்சாமல் ஒன்று திரண்டு எங் கள் மாவீரர்களை நினைவுகூர முன்வர வேண்டும்.;;. மற்றும் பிரதானமான விடயமாக புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை யில் ஒன்றும் இல்லை என கூறுபவர்கள் பகி ரங்க விவாதத்திற்கு தயாரா என சிரேஷ்ட சட்டத்தரணி சுமந்திரன் சவால் ஒன்றை விடுத்திருந்தார். நான் சுமந்திரனை இர ண்டு கண்ணோட்டங்களில் பார்க்கின்றேன். அவர் ஒரு சிறந்த சட்டத்தரணி. ஆனால் படு மோசமான தமிழ்த் தேசிய அரசியல்வாதி. அவருடைய சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராகவுள்ளோம். அவருடைய சவாலை ஏற்றுக்கொண்டு ள்ள நாம், அவருடன் விவாதத்தில் ஈடுபடுவ தற்கு இரண்டு நிபந்தனைகளை விதிக்கின் றோம். ஒன்று அவர் விசேட அதிரடிப்படை யுடன் வர கூடாது. அடுத்து விவாதம் பொது அரங்கில் ஊடகங்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும். எங்கள் தாயகம், சுயநிர்ணயம், தேசியம் நிராகரிக்கப்பட்டுள் ளது. ஆகவே நாங்கள் விவாதத்திற்கு தயார், சுமந்திரன் திகதியை கூறட்டும். இந்த சவால் மட்டுமல்ல, எந்த சவாலையும் நாங்கள் ஏற் றுக்கொள்ள தயார் என சுகாஸ் கூறினார்.