மே.வங்கம், அசாமில் பா.ஜ., ஆட்சி: கருத்து கணிப்பு !!

தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இதன்படி தமிழகம், புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக, வரும், ஏப்ரல் 6ம் தேதியும், அசாமிற்கு மூன்று கட்டங்களாகவும்,மேற்கவங்க மாநிலத்திற்கு எட்டு கட்டங்களாகவும், தேர்தல் நடந்து முடிந்தது. பதிவான ஓட்டுகள் மே 2ல் ஓட்டு எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை இந்தியா டுடே, ரிபப்ளிக் டி.வி., சி.என்.எக்ஸ், ஈ.டி.ஜி, ரிசர்ஜ், பி. மார்க், ஏ.பி.பி., ‘சி’ ஓட்டர்ஸ் ஆகியவை கருத்துகணிப்புகளை வெளியிட்டுள்ளன.
அதன்விவரம்:

ரிபப்ளிக் சி. என்.எக்ஸ்: கருத்து கணிப்பு

தமிழகம்:

தமிழகத்தில் 234 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி 56 முதல் 68 தொகுதிகளிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 தொகுதிகளிலும் மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி வெறும்

கேரளா:

கேரளாவில் 140 தொகுதிகளில் இடது சாரிகள் கூட்டணி 72 முதல் 80 தொகுதிகளிலும், காங்., கூட்டணி 58 முதல் 64 தொகுதிகளிலும், பா.ஜ., 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

மேற்குவங்கம்:

மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 138முதல் 148 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்., 126 முதல் 136 தொகுதிகளிலும், காங்., கூட்டணி 10 முதல் 17 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

அசாம்:

அசாமில் 126 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 75 முதல் 85 தொகுதிகளிலும், காங். கூட்டணி 40 முதல் 50 தொகுதிகளிலும், வெற்றி பெறும்

புதுச்சேரி:

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், பா.ஜ, கூட்டணி 16 முதல் 20 தொகுதிகளிலும், காங்., கூட்டணி 11 முதல் 13 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

டைம்ஸ் நவ்:

திரிணமுல்158.,பா.ஜ.,115, சிபிஐ.,19

பி-மார்க்-

திரிணமுல் 158,பா.ஜ.,120 ,சிபிஐ.,14

ஈடிஜி ரிசர்ச்:

திரிணமுல் 169,பா.ஜ.,110 ,சிபிஐ.,13., மற்றவை 0-1

போல்- ஆப் போல்ஸ்

திரிணமுல்:195,பா.ஜ.,122,சிபிஐ.,15,.