- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
- பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!
- கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது: தமிழிசை
‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது. திருமாவளவனின் கட்டப்பஞ்சாயத்து பிரச்சினையும் தீர்த்துவைக்கப்பட்டுவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் இன்று கரூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது,
”டெங்குவை தடுக்க தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததால் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது. திருமாவளவனின் கட்டப்பஞ்சாயத்து பிரச்சினையும் தீர்த்துவைக்கப்பட்டுவிட்டது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுப்போம்.
எனது செல்போனுக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. இதனைக்கண்டு நான் பயப்படப் போவதில்லை. விமர்சனங்கள் நாகரீகமாக இருக்க வேண்டும்” என்று தமிழிசை கூறினார்.