முஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்

கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது என அம்மாநில பா.ஜ., அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில பாஜக மூத்த தலைவரும், மாநில கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளார். செய்தியாளர்களுக்கு ஈஸ்வரப்பா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: பெலகாவி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் இந்துக்களில் உள்ள எந்தவொரு சமூக பிரிவினருக்கும் தேர்தலில் போட்டியிட நாங்கள் தொகுதி வழங்குவோம்.

அவர் லிங்காயத் பிரிவை சேர்ந்தவராக இருப்பினும், குருபர், ஒக்கலிகர் பிரிவினராக இருப்பினும் அல்லது பிராமணராக இருப்பினும் எங்களுடைய கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும். ஆனால் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது. ஏனெனில் பெலகாவி தொகுதி, இந்துத்துவாவின் மையங்களில் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.