- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

முரளியைக் குறை கூறிய நடுவருக்கு நன்னடத்தை சிறை
உலகின் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சைக் குறை கூறிய நடுவர் டெரல் ஹெயார், பணத் திருட்டில் நன்னடத்தைத் தண்டனை பெற்றார்.
1995ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கை அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அணியில் இணைந்து சிலகாலமே ஆகியிருந்த முத்தையா முரளிதரனும் அந்தத் தொடரில் பங்கேற்றிருந்தார்.
அத்தொடரின் போட்டியொன்றில் நடுவராகக் கடமையாற்றிய டெரல் ஹெயார், முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றதாகத் தெரிகிறது என்று குறைகூறியிருந்தார். இதையடுத்து எழுந்த குற்றச்சாட்டுகளால் முரளிதரன் பல முறை தனது பந்துவீச்சு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது.
முரளிதரன் மீது குறை கூறிய அதே நடுவர் டெரல் ஹெயார், சூதாட்ட மோகத்தினால் மதுபான விடுதியொன்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ஒன்பதாயிரம் டொலர்களைத் திருடியது தற்போது அம்பலமாகியிருக்கிறது.
இதுபற்றிய நீதிமன்ற விசாரணையில், தனது தவறை நடுவர் டெரல் ஹெயார் ஒப்புக்கொண்டார். அத்துடன், அந்தப் பணத்தைத் திருப்பியளிக்கவும் ஒப்புக்கொண்டார்.
இதனால் அவர் குற்றவாளி எனப் பதிவு செய்யப்படாத போதும், ஒன்றரை வருடங்கள் நன்னடத்தைச் சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.