முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) காலமானார்

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) மாலை 5. 05 மணியளவில் காலமானார்.
முன்னதாக அவர் சிகிச்சை பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜூலை 11ம் தேதி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை இன்று கவலைக்கிடமானது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை இன்று (ஆக.,16) மாலை 3.30 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், உயிர்காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து உடல் நிலையில் முன்னேற்றம் வரவில்லை. இந்நிலையில் இன்று மாலை அவரது உடல் மாலை 5.05 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

பிரதமர் மோடி அஞ்சலி

வாஜ்பாய் மறைவுக்கு பிரதமர் மோடி , தனது இரங்கல் செய்தியில்: அவரது பணிகள் என்றும் மறக்க முடியாதது. ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛நாட்டின் உயர்ந்த தலைவர் வாஜ்பாய் மறைவைக் கேட்டு சோகம் அடைந்துள்ளேன்” என்றார்.