முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்

‘தி.மு.க.,வை, ஹிந்து விரோதக் கட்சி என்று, மாயத் தோற்றத்தை உருவாக்க, பா.ஜ., முயற்சிக்கிறது’ என, கண்டனம் செய்திருக்கிறார் ஸ்டாலின்! ‘ஹிந்து என்றால் திருடன்’ என்று விளக்கம் அளித்தவர், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி.’ஹிந்து மதத்தில் இருக்கும் திருமணச் சடங்குகள் ஆபாசமானவை’ என, அடித்துச் சொன்னவர், இதே ஸ்டாலின் தான்.

முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போன ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல், கீழே கொட்டி அவமானப்படுத்தினார். காஞ்சிபுரம் கோவிலில் அர்ச்சகர் ஒருவர், தன் நெற்றியில் வைத்த சந்தனத்தையும் விபூதியையும் உடனே அழித்து, தன் ஹிந்து விரோத செயலை பகிரங்கப்படுத்தினார். திருச்சியில் வழங்கப்பட்ட, கும்ப மரியாதையை ஏற்க மறுத்தார், ஸ்டாலினின் மகன் உதயநிதி.

இப்படி கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என, அவரது குடும்பமே, ஹிந்து விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. தேர்தலுக்காக இப்போது, ‘நாங்கள், ஹிந்து விரோதிகள் இல்லை’ என்றால், இந்நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் ஹிந்துக்களின் காதுகளில் மலர் சூடி மகிழ நினைக்கிறார். ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என, அண்ணாதுரை சொல்லி இருக்கிறார்’ என்கிறார், ஸ்டாலின். ‘திருவரங்கத்தில் உறையும் திருவரங்க நாதனை, பீரங்கி கொண்டு பிளக்கும் நாள், எந்நாளோ?’ என, ஆசைப்பட்டவர் தானே, அண்ணாதுரை!

‘திருப்பதி பெருமாள், கடவுள் என்றால், அந்த கோவில் உண்டியலுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு?’ என, எள்ளி நகை ஆடியவர் தானே, கருணாநிதியின் மகள் கனிமொழி.ஸ்டாலின் மனைவி துர்காவின் நெற்றியில் இருந்தால், அது குங்குமம். அதே குங்குமம், தி.மு.க., தொண்டனின் நெற்றியில் இருந்தால், கருணாநிதியின் கண்களுக்கு ரத்தமாக தெரிந்ததே… அது யாருடைய குற்றம்?

‘கோவில், கொடியோரின் கூடாரமாக மாறக் கூடாது’ என, ‘டயலாக்’ எழுதிய கருணாநிதியின் ஆட்சியில், கோவில் சிலைகள் கடத்தப்பட்டன. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வேல் ஏந்தி, குன்னக்குடிக்கு எத்தனை முறை காவடி எடுத்தாலும், முதல்வராக முடியாது.