முத்தலாக் தடை மசோதா நிறைவேறிய இந்த நாள் சமூக நீதிக்கு ஒரு மைல்கல்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

முத்தலாக் தடை மசோதா நிறைவேறிய இந்த நாள் சமூக நீதிக்கு ஒரு மைல்கல் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். முத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் கடந்த 25-ம் தேதி நிறைவவேறியது. இதனையடுத்து ராஜ்யசபாவில் இன்று (30-ம் தேதி) நிறைவேறியது.

முத்தலாக் முறையை ரத்து செய்வதற்கான மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், மசோதா பார்லிமென்டின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த மசோதா சமூக நீதிக்கு ஒரு மைல் கல்லாகும். நாடே திருப்தியடைந்த தருணம் இது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

@rashtrapatibhvn
Passage in the Rajya Sabha of Muslim Women (Protection of Rights on Marriage) Bill completes Parliament’s approval of ban on the inequitable practice of triple talaq. A milestone in the quest for gender justice; a moment of satisfaction for the entire country #PresidentKovind

இந்நாள் ஜனநாயகத்தின் சிறந்தநாள்.பிரதமரின் உறுதிப்பாட்டுடன் இம் மசோதா நிறைவேறியதற்கு வாழ்த்துகிறேன். இச்சட்டம் முஸ்லிம்பெண்களை பிற்போக்குத்தனமான நடைமுறை சாபத்தில் இருந்து விடுவிக்கும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மசோதாவை ஆதரித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உ.பி., முதல்வர் யோகி ஆதி்த்யநாத்:

பெண்களின் கவுரவத்திற்கான அடையாளம். காங்கிரஸ் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் நிலை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெண்களின் அதிகாரம் பற்றி பேசுபவர்கள் மசோதாவை எதிர்த்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்:

இன்று ஒரு வரலாற்று சாதனை நாள் இரு அவைகளும் முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கி உள்ளன. என்றார்.