முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

முத்தலாக் முறையை ரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.முத்தலாக் சட்ட மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதா லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்ததை அடுத்து ஜனாதிபதியும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது இஸ்லாமிய பெண்களுக்கு கிடைத்த வெற்றி என பெண்கள் அமைப்புகள் கூறி உள்ளன.