முதல்-அமைச்சரின் உடல் நிலை குறித்து ஒத்த கருத்துடன் செயல்பட அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து

முதல் – அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடி யாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.

இதே போல வெளியூரில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும்படி உத்தரவிடப்பட்டது.இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்தனர். அவர் கள் அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களின் அவசர கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது இந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.இந்த அவசர கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. இந்த் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒற்றுமையாக செயல்பட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கபட்டதாக தெரிகிறது. மேலும் அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் கையெழுத்து பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால முதல்-அமைச்சராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் இன்று பிற்பகலில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவை மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.