Go to ...
Canada Uthayan Tamil Weekly
* கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கம்    * அப்பல்லோவில் ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில் சசிகலா எடுத்த வீடியோ எங்களிடம் உள்ளது-டிடிவி தினகரன்    * பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளால் திருடப்படும் அபாயத்தில் உள்ளன: அதிர்ச்சி தகவல்    * மியான்மரில் இருந்து வங்கதேச அகதிகளுக்கு 'சிம்' வழங்க தடை : வங்கதேசம் கட்டுப்பாடு    * ஜெர்மனியில் நான்காம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் மெர்கல்
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Tuesday, September 26, 2017

முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியே கடிதம்


அ.தி.மு.க. 2 அணிகள் நேற்று இணைந்தது இதை தொடர்ந்து தினகரன் இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல் ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழக கவர்னரை சந்திக்க டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று கவர்னர் மாளிகை வந்தனர். அவர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவைச் அந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர்.அதில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் ஆளுநரிடம் மனு அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரெங்கசாமி, சுப்பிரமணியன், கென்னடி மாரியப்பன், எஸ்.டி.ஜே.ஜக்கையன், சுந்தர்ராஜ், தங்கதுரை, கதிர்காமு, முத்தையா, ஏழுமலை, பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கோதண்டபாணி, முருகன், பாலசுப்பிரமணியன்,உமாமகேஸ்வரி ஆகியோர் வந்திருந்தனர்.

19 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக கவர்னருக்கு கடிதம் கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

, ”ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் நானும், 121 எம்.எல்.ஏ-க்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து கடிதம் கொடுத்திருந்தோம். அதேபோல், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, அவருக்கு ஆதரவாக நான் வாக்களித்தேன்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவைகளால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த 4 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அரசியல் சாசனம் அளித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட முடியாது.

ஆளுநர் மாளிகைக்கு வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர். அந்த கடிதத்தில், ”ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் நானும், 121 எம்.எல்.ஏ-க்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து கடிதம் கொடுத்திருந்தோம். அதேபோல், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, அவருக்கு ஆதரவாக நான் வாக்களித்தேன்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவைகளால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த 4 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அரசியல் சாசனம் அளித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட முடியாது. என கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2