முதல்வர் இபிஎஸ் & துணை முதல்வர் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் வீர பிள்ளைகள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் வீர பிள்ளைகள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வெற்றிடம் ஏதும் இல்லை. ஜெயலலிதாவின் வீர பிள்ளைகளான முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டனர்.

சசிகலா அதிமுக.,வுடன் இணைவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.