முதல்வன் தோனி

சர்வதேச அளவில் மூன்று விதமான ஐ.சி.சி., உலககோப்பை பெற்றுத் தந்த ஒரே கேப்டன் தோனி மட்டும்தான். இவரது

தலைமையிலான இந்திய அணி 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது. பின், 2011ல் 50 ஓவர் உலககோப்பையை கைப்பற்றியது. கடந்த 2013ல் மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியைவென்றது.

* ஆசிய கோப்பை தொடரில் தோனி தலைமையிலானஇந்திய அணி இரண்டு முறை (2010, 2016) சாம்பியன்பட்டம் வென்றது. இதன்மூலம் இவர், 5 அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றமிகப் பெரிய தொடர்களில் அதிக முறை (5) கோப்பை வென்று தந்த கேப்டன்கள்பட்டியலில் முதலிடம் பிடித்தார். பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின்ரிக்கி பாண்டிங் தலா 4 முறை கோப்பை வென்று 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

* டெஸ்ட் போட்டியிலும் இவரது தலைமையிலான இந்திய அணி ‘நம்பர்–1’ இடம்பிடித்தது. தவிர, ஐ.சி.சி., சார்பில் வெளியிடப்படும் சிறந்த ஒருநாள் போட்டிக்கானலெவன் அணியில் 8 முறை இடம் பெற்றுள்ளார்.

271

அதிக ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவிக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் தோனி. இவர் அதிகபட்சமாக 271 போட்டிகளுக்கு (199 ஒருநாள் + 72 ‘டுவென்டி–20’) விக்கெட் கீப்பர்–கேப்டனாகஇருந்துள்ளார்.

6633

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்–கேப்டன்கள் பட்டியலில்முதலிடத்தில் உள்ளார் தோனி. இவர், 199 போட்டியில் 6 சதம், 47 அரைசதம் என 6633 ரன்கள் குவித்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா (1756 ரன், 45 போட்டி), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (1429 ரன், 30 போட்டி), ஜிம்பாப்வேயின்ஆன்டி பிளவர் (1077 ரன், 46 போட்டி) ஆகியோர் உள்ளனர்.

4

சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாமல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,), சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர்களிலும் கேப்டனாக அசத்தினார் தோனி. இவரதுதலைமையிலான சென்னை அணி இரண்டு முறை (2010, 2011) ஐ.பி.எல்., மற்றும்இரண்டு முறை (2010, 2014) சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்களில் கோப்பை வென்றது.

கேப்டனாக இதுவரை

டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் கேப்டனாக தோனியின்செயல்பாடு…

பிரிவு ஆண்டு போட்டி வெற்றி தோல்வி டை டிரா மு.இ.,

டெஸ்ட் 2008–14 60 27 18 0 15 –

ஒருநாள் 2007–16 199 110 74 4 – 11

‘டுவென்டி–20’ 2007–16 72 41 28 1 – 2

* மு.இ., – முடிவு இல்லை

வீட்டின் முன் மறியல்

தோனி முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,‘‘ கேப்டன் பதவியிலிருந்து தான் தோனி விலகினார். ஒருவேளை இவர் முழுமையாகஓய்வு அறிவித்தால், அவரது வீட்டு முன் நானே மறியல் போராட்டம் நடத்துவேன். ஏனெனில், இவர் இன்னும் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளார். ஒரு வீரராகபோட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி,’’ என்றார்.

சரியான தருணம்

தோனியின் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே கூறுகையில்,‘‘ கேப்டன் பதவியிலிருந்துவிலகுவது என்பது ஒரு நாள் இரவில் எடுத்த முடிவு அல்ல. நன்றாக சிந்தித்து தான்எடுத்துள்ளார். ஒரு ‘கீப்பராக’ மட்டும் அணியில் தொடர்வதற்கு, இதுதான் சரியானதருணம் என நினைத்திருக்கலாம்,’’ என்றார்.

வியக்க வைத்தவர்

இந்திய ஒரு நாள், ‘டுவென்டி–20’ அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினார். இது குறித்து ‘டுவிட்டரில்’ கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியிட்ட செய்தி.

மைக்கேல் வான் (இங்கிலாந்து): தோனி வியக்கத்தக்க கேப்டனாக திகழ்ந்தார்.

மைக்கேல் கிளார்க் (ஆஸி.,): மிகச்சிறந்த வீரரான தோனி, கேப்டன் பதவியிலிருந்து தான்விலகியுள்ளார். இவரால் அணிக்கு இன்னும் வெற்றி தேடித்தர முடியும். விராத் கோஹ்லிமூன்றுவிதமான போட்டிக்கும் தலைமை தாங்கலாம்.

சவுரவ் கங்குலி (இந்தியா): இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தோனிகேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது சரியான முடிவு.

சச்சின்: ஒரு நாள், ‘டுவென்டி–20’ யில் உலக கோப்பை வென்று தந்த தோனிக்குவாழ்த்துகள். இவரின் விலகல் முடிவுக்கு மதிப்பு அளிக்கிறேன்.

முகமது கைப் (இந்தியா): தோனியை கேப்டனாக பெற்றதில் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம்அடித்துள்ளது.

இர்பான் பதான் (இந்தியா): தோனியின் ‘கேப்டன்ஷிப்’ பற்றி விவரிக்க வார்த்தைகளேஇல்லை.

அப்ரிதி (பாக்.,): இந்திய கிரிக்கெட் அணியை திறம்பட உருவாக்கியவர் தோனி.

ரகானே (இந்தியா): கேப்டனாக இருந்த தோனியிடமிருந்து அதிகமாக கற்றுக் கொண்டேன்.

ரெய்னா (இந்தியா): இந்திய அணிக்கான தனது எண்ணங்கள் அனைத்தையும் நிஜமாகமாற்றிக்காட்டினார் தோனி.

ரோகித் சர்மா (இந்தியா): என்னைப்போன்ற எத்தனையோ வீரர்களுக்கு ஊக்க சக்தியாகதோனி திகழ்ந்தார்.

ஹர்திக் பாண்ட்யா (இந்தியா): கேப்டன் தோனியுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும்மதிப்புமிக்கது.