மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்; என்று தமிழர்களிடம் கேட்கும் ஜனாதிபதி யாழ் மண்ணில் வாள்வெட்டும் வேண்டாம் என்று கேட்கவில்லையே!!

முன்னாள் ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சா, தானே விடுதலைப் புலிகளை வென்று, யுத்தத்தை நிறுத்தியவர் என்று மார் தட்டுகின்ற நாட் தொடக்கம், தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதைப்போன்றே மகிந்தாவை வெற்றி கொண்டு. தமிழ்த் தேசியகூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு ஜனாதிபதியா பதவியேற்ற பின்னர் குறைந்தது ஆயிரம் தடவை என்றாலும் கூறியிருப்பார் “மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்” என்று. யாழ் மண்ணை நோக்கி அவர் தனது பட்டாளங்களுடன் “படையெடுக்கும்” போது தனது முன்னைய உரைகளின் பிரதிகளையும் கொண்டுதான் வருகின்றாரா என்ற கேள்வியே எம் அனைவர் முன்பாகவும் எழுந்து நிற்கின்றது.

சுpல நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் மயிலிட்டி என்னும் கடலோரக் கிராமத்தில் நடைபெற்ற துறைமுக அபிவிருத்தி தொடர்பான விழாவில் அவர் உரையாற்றியபோதும் “மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம” என்ற பழைய பல்லவியையே பாடியுள்ளார்.
ஜனாதிபதி அவர்கள், யாழ்ப்பாணத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நாட்களில் தான் அதிக வீச்சுடன் வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்;கள் ஆகியன இடம் பெற்றுள்ளன. கடந்த பல மாதங்களாக யாழ்ப்பாண மக்களும் முதலமைச்சர் போன்ற சிரத்தை அதிகம் கொண்ட அரசியல்வாதிகளும் அதிர்ந்து போகும் வகையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் மற்றம் தாக்குதல்கள் ஆகியன அப்பாவித் தமிழ் மீது ஏவி விடப்படுகின்றன. ஆனால் அதற்கு எதிராக எந்த அரசியல்வாதிகளும் கருத்துக்களை முன்வைக்கவில்லை

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு மற்றும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் அரசின் காவலர்களாக உள்ள பொலிஸ் மற்றும் இராணுவம் போன்ற பிரிவுகளின் சம்மதம் இன்றி இடம்பெறுவதற்கு சந்தர்ப்பங்;களே இல்லை என்று நாலா திசைகளிலிருந்தும் கருத்துக்கள் வெளிப்படுகின்றபோது யாழ்ப்பாணத்தில் நின்று கொண்டு உரையாற்றிய நாட்டின் ஜனாதிபதி, அந்த கொடுமைகள் பற்றி வாயn திறக்கவில்லை. இது ஏன் என்றுதான் நாம் கேட்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடு கள், தேநீர் கடை, கராஜ் ஆகிய இட ங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடு பட்டுள்ளது. அங்கு இயங்கிவரும் ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை வீடியோ அழைப்பில் நேரலையாக ஒருவரு க்கு காண்பித்துள்ளது.

இலக்கத்தகடுகள் அற்ற 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும் பலே இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டது. கும் பலிடம் இருந்த வாள்கள் பளிச் என்று தெரி ந்தன. அவை மிகப் பெரியளவில் இருந்தன. வந்தவர்களில் ஒருவர் தனது அலைபேசி யின் ஊடாக வீடியோ அழைப்பை ஒருவருக்கு எடுத்து தமது அடாவடிகளை நேரலை யாகக் காண்பித்தார் என்று பாதிக்கப்பட்ட வர்கள் தெரிவித்தனர். இதேபோன்று யாழ்ப்பாணம், கொக்குவில் பிரம்படி லேன் மற்றும் புகையிர நிலையத்தடியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல், அங் குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

உடைமைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. அந்த இரண்டு வீடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது என சந்தேகம் வெளியிடப்பட்டது. இவ்வாறாக யாழ்ப்பாண மண் பயங்கர பூமியாக உருவெடுத்துள்ளமை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டியது ஒன்றே நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.