மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்-பொய்யான வாக்குறுதிகளை உங்களுக்கு நான் வழங்கமாட்டேன் : யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

நாடு முழுவதும் போதைப்பொருள் போதைப் பொருள் விடயமானது ஒரு வி~மாக பரவி வருகின்றது. இந்த போதைப் பொருள் விடயத்தில் கடுமையான சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தவுள்ளேன். வடபகுதியில் குடிநீர் மற்றும் விவ சாயம் தொடர்பான பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இரணைமடு விற்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.

உடனடியாக நடைமுறைப்படுத்த முடியுமென நான் பொய்யான வாக்குறுதிகளைத் தர மாட்டேன். 10 வருடங்களின்போதுதான் குடிநீர் இரணைமடுவை நோக்கி வழிந் தோடும். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் மட்டுமன்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியும் சிந்தித்து நீர்ப்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின் றோம். மேலும் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுதல் நாட்டு மக்க ளின் பொறுப்பாகவும் குறிக்கோளாகவும் காணப்பட வேண்டும். ஆயிரக்கணக் கான உயிர்களை இழந்து தேசிய சொத்துக்களை சிதைத்து நாட்டினை பின் னோக்கி கொண்டு சென்ற கொடூர பயங்கரவாதம் எவ்வகையிலும் மீண்டும் உருவாக இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மயிலிட்டி துறைமுக புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் மயிலிட்டி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்று கையில், வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதியூடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் போதாது என ஏற்றுக் கொள்கிறேன். மக்களின் பிரச்சினைகளில் புரிந் துணர்வுடன் செயற்பட்டு வருவதுடன் விடு விக்கப்படாத காணிகள் விரைவில் விடு விக்கப்படும்.

முழு நாட்டின் தேசிய பொருளாதாரத் திற்கும் நன்மை பயக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றேன்.

இது உங்கள் பகுதி மக்களின் வாழ்வா தாரப் பிரச்சினை. யுத்தத்துக்கு முன்னர் மயிலிட்டி துறைமுகத்தின் மூலம் நாட்டுக்கு தேவையான 3 ல் 1 வீதமான மீன் வளங் களைப் பெற்றுக்கொடுத்த பிரதேசம்தான் இந்த மயிலிட்டிப் பிரதேசம். யுத்தத்துடன் இந்த மயிலிட்டி துறைமுகத் தின் வளங்களும் அழிந்துவிட்டதுடன், எமக்கு பல அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. யுத்தத்தினால் மனித உயிர்களை மாத்திரம் இழக்கவில்லை. சமூகத்தில் இருக்கக்கூடிய நீதி நியாயம், நீதி சமத்துவம் என்பன அழி ந்துவிட்டன.

முக்கியமாக மனிதாபிமானம் மற்றும் இழப்புக்களை எதிர்நோக்கியுள்ளோம். எனவே, ஆயுதங்கள் ஊடாக போராடிய வர்கள் மனிதாபிமான ரீதியில் வெற்றி பெற்றிருக்கமாட்டார்கள். யுத்த காலத்தின் போது மிகவும் கஷ்டங்களுக்கும் இழப்புக் களுக்கும் முகம் கொடுத்தவர்கள்தான் இந் தப் பகுதி மக்கள். எஸ்.ஜே .வி செல்வநாயகத்தினை மாவை சேனாதிராசா ஞாபகப்படுத்தியுள்ளார். அ.அமிர்தலிங்கம் இந்த நாட்டில் மிகவும் சிறந்த ஒரு அரசியல்வாதி.

யுத்தத்தின் போது சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவரும் அழிந்து போனார்கள். இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு நாம் அனை வரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டி யதே முக்கிய நோக்கம்.

உங்கள் பிரச்சினைகளை உங்கள் தலைவர்கள் சரியாக தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் பிரச்சினைக்காக உங் கள் தலைவர்கள் போராட வேண்டும். ஒரு நாடு என்ற வகையில் ஏதாவது பிரச்சினை வந்தால், அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்தப் பிரச்சினைக்கு எதிராக போராட வேண்டும்.

உண்மையில் எனது ஆட்சிக்காலப் பகுதியில் நாட்டில் எங்கிருந்தாலும், எவற்றி னையும் பேசக்கூடிய சுதந்திரத்தினைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். சமூக வலைத் தளங்களில் என்னை சீண்டும் அளவிற்கு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடு வதில்லை. எனக்கு முன்பிருந்த காலத்தில் இன்று சொல்வதைப் போன்று சொல்லி யிருந்தால், அவர்களுக்கு என்ன நடந் திருக்குமென்று நினைத்துப் பாருங்கள். 6 அடி குழிக்குள்தான் சென்றிருப்பீர்கள். வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் பல போராட்டங்களை முன்னெடு த்த போது, நான் அவரை சந்தித்துப் பேசி னேன். அவர் கூட மக்களின் பிரச்சினைக் காகத்தான் பல போராட்டங்களை முன் னெடுத்தார் என்பது எனக்குத் தெரியும். ஜனாதிபதித் தேர்தலின்போது, இந்தப்பகுதி மக்கள் 90 வீதமானவர்கள் எனக்கு வாக்களித்திருந்தார்கள்.
கடந்த 3 வருட காலமாக இந்த நாட்டில் பல பிரதேசங்களில் நிலவும் பிரச்சினை களைத் தீர்த்து வைத்துள்ளேன். இன்னும் அதற்கான செயற்றிட்டங்களை முன்னெ டுத்து வருகின்றார்கள். நான் பதவி ஏற்கும் முன்னர் இந்தப் பகுதிக்கு வெளிநாட்டவர்கள் எவரும் வர முடியாது. வட மாகாண மக் களின் பிரச்சினைகளை மட்டுமன்றி. கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி சர்வதேச ரீதியாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் நிவர்த்தி செய்து வருகின்றோம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகளவான நிதியினை ஒதுக்கி வைத்துள் ளோம். ஆனால், அந்த நிதிகளினூடாக செய் யும் அபிவிருத்திகள் போதாது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன்.இந்த நாட்டில் எந்தவொரு ஜனாதிபதியும் வடமாகாணத்திற்கு அதிகமாக வந்து போனதில்லை. வட மாகாணத்திற்கான விஜயத்தினை விநோதமான சவாரியாக எடுத்து வருவதில்லை. உங்களின் அனைத் துப் பிரச்சினைகளையும் புரிந்து கொள்வ தற்கும், அறிந்து கொள்வதற்கும் அந்த வேலைகளை சீக்கிரமாக செய்து முடிப்பதற் காகவே வருகின்றேன்.
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சரியான புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம். மயிலிட்டி துறைமுகம் புனரமைப்புச் செய்யும் அதேநேரம், இந்தப் பகுதி மக்களின் காணிகளையும் விடுவிப் பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வடகிழக்கு அபிவிருத்திக்காக ஜனாதிபதி செயலணி கூட்டம் எதிர்வரும் வாரம் நடை பெறவுள்ளது. செயலணி மூலம் கொடுக்கும் பணம் செலவிடப்படுகின்றன என்பதனை ஜனாதிபதி செயலணி தேடிப் பார்க்கின்றது. ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுகின்றேன். சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவை வட கிழக்கு மாகாணங்களிற்கு உட்பட்ட பிரச் சினை அல்ல. முக்கியமாக போதைப் பொருள் மற்றும் மதுபானம். போதைப் பொருள் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிராக விசேட நடைமுறை ஒன்றினை கொண்டிருக்கின்றோம். பாடசாலை மாண வர்கள் மத்தியில் போதைப்பொருள் விற் பனையை போதைப்பொருள் விற்பனை யாளர்கள் விற்பனை செய்து வருகின்றார்கள்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளை ஞர்கள் மத்தியில் விற்பனை செய்யும் இந்த போதைப் பொருளினை கட்டுப்படுத்த பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். போதைப்பொருள் பாவனையைக் கட்டுப் படுத்த முன்னெடுக்கப்படும் நடவடிக்கை களை மேலும் பலப்படுத்த வேண்டும். போதைப்பொருள் விற்பனை செய்பவர்க ளுக்கு அதிகபட்சமான தண்டனைகளை வழங்கவுள்ளதுடன், மரண தண்டனை கூட வழங்குவோம் என்றார்.

போதைப்பொருள் விடயத்தில் சட்டத் தினை முழுமையாக அமுல்படுத்தவுள்ளேன். வடபகுதியில் குடிநீர் மற்றும் விவ சாயம் தொடர்பான பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இரணைமடு விற்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.
உடனடியாக நடைமுறைப்படுத்த முடியுமென நான் பொய்யான வாக்குறுதிகளைத் தர மாட்டேன். 10 வருடங்களின்போதுதான் குடிநீர் இரணைமடுவை நோக்கி வழிந் தோடும். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் மட்டுமன்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியும் சிந்தித்து நீர்ப்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின் றோம் என மேலும் தெரிவித்தார்