மின் கட்டணத்தை 2 இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும்

நிதி அமைச்சின் மாதாந்த மின் கட்டணத்தை இரண்டு இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும் என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய, அனைத்து அரச நிறுவனங்களையும் சூரிய சக்தி பயன்பாட்டிற்கு மாற்றும் தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று, நிதி அமைச்சில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.