மாவீரர் புகழ் பாடும் மகத்தான மாதமாம் கார்த்திகையை நாம் பக்தியோடு பூசிப்போம்!!

நிறைவேற்று எமது தமிழினத்தில் பிறந்து பல்வேறு துறைகளில் பணியாற்றி, சேவைகளையும் சாதனைகளையும் அரிய கண்டுபிடிப்புக்களையும் எமக்காய் அளித்து விட்டு இவ்வுலக வாழ்வை நீத்த இலட்சக் கணக்கானவர்கள் எமது நினைவு வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.அவர்களில் பலர் நேர்மையான அரசியல்வாதிகளாய், அறிவு பசிக்கு தீனி இட்ட ஆசிரியப் பெருந்தகைகளாய், உயிர்களைக் காப்பாற்றிய வைத்தியப் புண்ணியர்களாய், பக்தியை பரப்பி நின்று எமக்கு நல்லுபதேசங்களை வழங்கிய ஆன்மிகப் பெரியோர்களாய் திகழ்ந்தவர்கள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இவ்வாறாக நாம் நன்றியுடன் கொண்டாடி மகிழ்ந்தவர்களின் நினைவலைகள் ஒரு புறம் காற்றில் பறந்த வண்ணம் இருக்க எம் இதயங்களில் என்றும் கடவுளர்களாய் வீற்றிருக்கும் மாவீரர்கள் என்னும் தியாகிகளை நாம் என்றும் மறக்கவே இயலாது. எப்போது நாம் முதலாவது மாவீரரை எமது இனமும் விடுதலைப் புலிகள் இயக்கமும் இழந்ததோஇ அன்றிலிருந்து ஆயிரக்கணக்கான மாவீரர்கள் தங்கள் இனிய உயிரை எமது இனத்தின் விடுதலைக்காகவும் தனது உடலை எமது தாயக மண்ணில் விதைப்பதற்;காகவும் ஈந்துஇ எம்மைப் பிரிந்த சென்று துயரையும் அவர்களது தியாகத்தின் வலிமையையும் நாம் எண்ணி வியந்து வணங்குகின்ற மாதமாகவே கார்த்திகை மாதம் கணிக்கப்படுகின்றது. எனவே இந்த மாதத்தில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளிலும் இந்த மாவீரர் தெய்வங்களை வணங்கும் தலங்களாக ஏற்று அவர்களின் வீரத்தையும் தீரத்தையும் தியாகத்தையும் கொண்டாடி மரியாதை செய்வோமாக!!