- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
- தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும் ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம்

மாரி 2 – சினிமா விமர்சனம்
போதை பொருள் கடத்தல் கும்பலும், அதற்கு எதிரான கதாநாயகனும். படம் “மாரி–2” கதாநாயகன் தனுஷ், கதாநாயகி சாய்பல்லவி, டைரக்ஷன் பாலாஜி மோகன் இயக்கியுள்ள மாரி–2 படத்தின் விமர்சனம்.
கதையின் கரு: தனுஷ் ஒரு ரவுடி என்றாலும், போதை பொருளை கடத்த மறுக்கிறார். அவரை ஒருதலையாக காதலிக்கிறார், சாய்பல்லவி. அவருடைய அக்காவின் மானத்தை தனுஷ் காப்பாற்றினார் என்பதால், அவர் மீது சாய்பல்லவி கொண்ட காதல் இன்னும் தீவிரமாகிறது.
போதை பொருள் கடத்தும் கும்பல், தனுசை எப்படியாவது போதை பொருள் கடத்த வைப்பது என்று சதி செய்கிறது. அந்த கும்பலின் தலைவன் டோவினோ தாமஸ் விரித்த வலையில், தனுசின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணா சிக்குகிறார். அவரை வைத்தே தனுசை கொல்ல திட்டமிடுகிறார், வில்லன் டோவினோ தாமஸ்.
இவருடைய சதி திட்டத்தில் இருந்து தனுஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார். அதற்கு காரணமாக அமைந்த சாய்பல்லவி, துப்பாக்கி குண்டு பாய்ந்து நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சாய் பல்லவி மீது தனுசுக்கு காதல் வருகிறது. தனுஷ் மீது தீராத பகை கொண்ட டோவினோ தாமஸ் தந்திரமாக தனுசை வரவழைத்து, அவரை கொல்ல முயற்சிக்கிறார். சாய்பல்லவி தன்னுயிரை கொடுத்து தனுசை காப்பாற்றுகிறார்.
சண்டை–சச்சரவுகளில் இருந்து விலகி, பகையில்லாத இடத்தில் தனுஷ் மகனுடன் சராசரி மனிதனாக வாழ்ந்து வருகிறார். அவரை டொவினோ தாமஸ் கண்டுபிடித்து மீண்டும் கொல்ல முயற்சிக்கிறார். அதில் இருந்து தனுசும், அவருடைய மகனும் தப்பினார்களா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.
தரை லோக்கலான ரவுடியாக இருந்தாலும் நீதி–நேர்மைக்கு தலை வணங்குபவராக தனுஷ். தன்னை விரட்டி விரட்டி காதலிக்கும் சாய்பல்லவியிடம் இருந்து ஒதுங்குவது, எதிரிகளை அசுர வேகத்தில் பந்தாடுவது, நண்பர்களுடன் சேர்ந்து ‘காமெடி’ செய்வது என தனுசுக்கு பொருத்தமான கதை. நூறு சதவீதம் பொருந்துகிற கதாபாத்திரம். நல்லவருக்கு நல்லவராக, கெட்டவருக்கு கெட்டவராக தனுஷ் வாழ்ந்திருக்கிறார். சண்டை காட்சிகளில் துணிச்சலின் உச்சம். பாடல் காட்சிகளில் ரசிகர்கள் எழுந்து நின்று ஆடுகிற அளவுக்கு அமர்க்களம்.
சாய்பல்லவி நடிப்பு, நடனம் இரண்டிலும் அழகு. தனுசுடன் போட்டி போட்டு நடித்து இருக்கிறார். பாடல் காட்சிகளில், தனுசுடன் போட்டி போட்டு ஆடியிருக்கிறார். தனுசின் நண்பராக கிருஷ்ணா. நண்பனே துரோகியாக மாறும் கதாபாத்திரத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.
துணிச்சல் மிகுந்த பெண் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். வில்லன் டொவினோ தாமசின் அண்ணனாக வின்சென்ட் அசோகன், ஒரு சில காட்சிகளே வந்தாலும், அட்டகாசம். டொவினோ தாமஸ், மிரட்டலான வில்லன்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள், சுகமான ராகங்கள். பின்னணி இசை, கதையின் ஓட்டத்துக்கு ஏற்ப இசைக்கப்பட்டு இருக்கிறது. கதையில், ‘வட சென்னை’யின் சாயல் நிறைய. டைரக்டர் பாலாஜி மோகன் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார்.