- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

‛மாடர்னா’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசியான. மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் கதிகலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும், இதுவரை 1.98 கோடி பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். 3.43 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்து கண்டுபிடிப்பு, அமெரிக்க மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கடந்த 21ம் தேதி, மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார். இந்நிலையில், துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில், மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக் கொண்டார். கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார். இந்நிகழ்வு டிவியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நேரலையில் பேசிய கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது எளிதானது என்றும், 2வது டோசை எடுத்துக் கொள்ள ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார். உயிர்களை காக்கும் இம்மருந்தை அனைவரும் எடுத்துக்கொள்ளும்படியும் அவர் மக்களை கேட்டுக் கொண்டார்.