மலேசியாவில் நுழைய அனுமதி மறுப்பு: எல்லாவற்றுக்கும் இலங்கை அரசே காரணம் – வைகோ குற்றச்சாட்டு

மலேசியாவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பில் பங்கேற் பதற்காக கோலாலம்பூர் சென்றேன். எனது பெயர் கருப்புப் பட்டியலில் இருப்பதாகக் கூறி இந்தியாவுக்கு திரும்பி விடுமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் என்று கூறியும் என்னை அனு மதிக்கவில்லை. விமான நிலையத் தின் ஒரு அறையில் 24 மணி நேரம் தங்க வைத்தனர். அப்போது நான் தண்ணீர்கூட அருந்தவில்லை.
சென்னையில் உள்ள இலங் கைத் தூதரகத்தில் அதிகாரியாக இருந்த அம்சா என்பவர், தற் போது இங்கிலாந்தில் இருக் கிறார். அவர் என்னைப் பற்றிய விவரங்களை அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பியுள் ளார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் பற்றி எந்த நாட்டிலும் பேசக் கூடாது என்பதற் காக எனக்கு விசா கிடைக்காமல் இலங்கை அரசு செய்து வருகிறது. மலேசியாவில் நுழைய எனக்கு அனுமதி கிடைக்காததற்கு இலங்கை அரசே காரணம்.
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் எனக்கு விசா கொடுப்பதில்லை. இது தொடர்பாக மலேசிய அரசிடம் விளக்கம் கேட்குமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருக்கிறேன். மலேசியாவில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனம் தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.
தலைவர்கள் கண்டனம்
மலேசியாவில் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக் கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள னர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.