மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர்

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள Easy Entertainment Canada வழங்கும் Easy Entertaining Night பல்சுவை நிகழ்வில் மேகாரியுனர்ஸ் அரவிந்தனின் இசைக்குழுவின் இசையில் பாடல்களைப் பாடவென வந்துள்ள ரிஎம்எஸ் செல்வகுமார் அவர்கள் இன்று மாலை ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
இவர் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை விமான நிலையத்தில் Easy Entertaining Night பல்சுவை நிகழ்வினை ந டத்தும் Easy Entertainment Canada
நிறுவனத்தின் இயக்குனர் திரு கிருபா கிசான் மற்றும் பல நண்பர்கள் கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் நண்பர்கள் என பலர் விமான நிலையத்தில் கூடியிருந்து பாடகர் ரிஎம்எஸ் செல்வகுமார் அவர்களை வரவேற்றனர்.